உயர்கல்வி தடை ஏற்பட காரணங்கள்

உயர்கல்வி பயிலும் போது தடை ஏற்பட அந்த நேரத்திலே நடைபெறும் திசாபுத்திகளே பெரிதும் காரணமாகின்றன. ஜோதிட விதிப்படி 6,8,12 போன்ற இடங்களில் இருந்து நடைபெறும் திசா புக்திகள் 6,8,12 ஆம் அதிபதிகளின்  திசா புக்திகள் பலம் குறைந்த ராகு, கேதுக்களின் சஞ்சாரங்கள் தடைகளை ஏற்படுத்தக்கூடிய கிரக அமைப்புக்கள் என்ன என்பதை காண்போம்.

* வித்யா காரகன் புதன் நீச்சம் 6,8,12 ல் மறைந்து பாவ சேர்க்கை பெற்று திசா நடத்துதல்.

* 2,4,9 ஆம் அதிபதிகள் பலம் குறைந்து பாபர் சேர்க்கை பெற்று திசா நடத்துதல்.

* கோட்சார அமைப்பில் ராசிக்கு, ராசியில் இரண்டாம் இடம், நான்காம் இடம், போன்ற ஸ்தானங்களில் ராகு, கேதுக்குள் வரும் போது தடை ஏற்படலாம்.

* கோட்சார அமைப்பில் 7½ சனி, 4ல் சனி, 8ல் சனி போன்ற சஞ்சாரங்கள் பாதிப்பை ஏற்படுத்தும்.

* எட்டாம் அதிபதி சனி, செவ்வாய் சேர்க்கை, பார்வை பெற்ற திசாபுக்திகளில் விபத்தினால் தடை ஏற்படும்.

* ஐந்து, ஏழாம் இடங்களில் சந்திரன், சுக்கிரன் சம்பந்தம் பெற்ற திசா புக்திகளில் காதலால் தடை ஏற்படும்.

* லங்கஸ்தானாதிபதியுடன் 6,8,12 க்குடையோர் சம்பந்தப்பட்ட திசா புக்திகளில் உடல் நலக் கோளாரால் தடை ஏற்படும்.

* இரண்டு, ஐந்துக்குடையவர்கள் பாபர் மற்றும் நீச்சம் பெற்ற கிரக சேர்க்கை பெற்ற திசா புத்திகளில் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், கர்ம வினைப்பயன் காரணமாகவும் தடை ஏற்படும்.

* சுக்கிரன், சந்திரன், செவ்வாய் சேர்க்கை பெற்ற திசாபுக்திகளில் கூடாத நட்பும், காம கேளிக்கை களியாட்டங்களால் தடை ஏற்படும்.

Related Stories: