×

ராமாவதாரம் எடுத்ததன் நோக்கம்?

திருமால், ராமாவதாரம் எடுத்ததன் நோக்கமே, ரிஷிகளுக்கு தரிசனம் அளிக்கத்தான். அதனால் தான் அவர் காட்டுக்கே போகும் சூழ்நிலையை ஏற்படுத்திக்  கொண்டார். அந்த முனிவர்களிலும் ஒருவர் ராமனை கோபமாக்கிவிட்டார். சாஸ்திர விரோதமாக யார் நடந்தாலும், பேசினாலும் ராமனுக்குப் பிடிக்காது.  மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட பரிவு கொண்டு, 'இன்று போய் நாளை வா' என்றவர், பிதுர் கர்மம் தொடர்பாக தவறாகப் பேசிய ஜாபாலி ரிஷி மீது  கோபம் கொண்டார். 'ராமா! மறைந்த பெற்றோருக்கு இங்கிருந்து பிண்டம் கொடுப்பது அவர்களைப் போய்ச் சேரும் என்கிறாயே! அதெப்படி சாத்தியம்?'' என்றார்.  அப்படி போனதை பார்த்தவர்கள் யாராவது உண்டா? ஒருவர் மறைந்த பிறகு தந்தையாவது, மகனாவது...'' என்றார். இதைக் கேட்டு ராமனுக்கு கண்கள் சிவந்து  உதடுகள் துடித்தன. 'மகரிஷியே! என்ன சொல்கிறீர்கள்? சாஸ்திர விரோதமாகப் பேசாதீர்கள். வேதத்தில் இந்த தர்மம் சொல்லப்பட்டிருக்கிறது. நீர் சொல்வதைப்  பார்த்தால் வேதமே அல்லவா தவறாகி விடும்!'' என்று கடிந்து பேசினார். உடனே அவர், 'அப்பா ராமா! அது எனக்கும் தெரியும். ஆனால், உன் வாயால்  தெள்ளத்தெளிவாக இந்த வார்த்தைகள் வரட்டுமே என்று தான், உனக்கு கோபமூட்டினேன். என்னை நாத்திகன் என எண்ணிக்கொள்ளாதே,'' என்றார். ராமன்  சமாதானம் ஆனார்.

Tags :
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்