ஸ்ரீ அருணகிரிநாதர்

ஸ்ரீமுருகப் பெருமானைப் பாமாலைகொண்டு பாடியதைக் கண்ட ஒருசிலர் பொறாமைகொண்டு, கேலி பேசினர். ஒருசமயம், அவர்களின் செய்கை, எல்லை மீறியதைக் கண்டு மனம் வருந்தி, “கந்தபெருமானே! உன்னை பக்தி, சிரத்தையுடன் பாடுபவர்களை பழித்தும் ஏளனமாகவும் பேசுகின்றார்களே? இவர்களை தீயினில் தூசாக்க அக்னி பகவானா வரவேண்டும்? எனது திருப்புகழே நெருப்பாக மாறி இந்தக் கயவர்களை எரிக்கவேண்டும்” என நெஞ்சுருகி “சினத்தவர் முடிக்கும்” என்ற திருப்புகழ் பாடலைப் பாடி முடிக்கவும், கேலி பேசி இகழ்ந்தவர் அனைவரும் சாம்பலாகி, பூமியில் சரிந்தததைக் கண்டு மனம் வருந்திய ஸ்ரீஅருணகிரிநாதர், ஸ்ரீமுருகப்பெருமானிடம், பெற்ற தாயென மன்னித்து, அருள்புரியவேண்ட, சாம்பலாகிவிட்டிருந்த அத்துணை பேரும் உயிர்பெற்று எழுந்து சித்த மகாபுருஷரை தலைவணங்கினர்

காரேய் கருணை இராமானுச

இக் கடலிடத்தில் ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை

அல்லலுக்கு நேரே உறைவிடம் நான் வந்து நீயென்னை உய்த்த பின்

உன் சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே

நடந்துகொண்டேயிருந்தால், கால்களும்,பார்த்துக்கொண்டேயிருந்தால் கண்களும், பேசிக்கொண்டேயிருந்தால் வாயும் வலித்துத்தான் தீரும்! ஆனால், கேட்டுக்கொண்டேயிருந்தால் காதுகள் வலிக்காது!! நல்லதைக் கேளுங்கள்; அதை நாலுபேருக்கு எடுத்துச் சொல்லி வழிகாட்டி அவர்களையும் நல்வழிப்படுத்தி, வாழவையுங்கள்!

- சித்த மகா புருஷர ஸ்ரீஅருணகிரிநாதர்

Related Stories:

>