இந்த வாரம் என்ன விசேஷம்?

ஏப்ரல் 3, சனி: சஷ்டி. தாயமங்கலம் முத்துமாரியம்மன் பூத வாகனத்தில் பவனி. திருவெள்ளறை சுவேததாத்திரிநாதர் புறப்பாடு கண்டருளல். பதஞ்சலி சித்தர் குருபூஜை.

ஏப்ரல் 4, ஞாயிறு: சப்தமி. கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் புறப்பாடு. திருவெள்ளறை சுவேததாத்திரிநாதர் பவனி. ஒழுகைமங்கலம் மாரியம்மன் உற்சவாரம்பம். சீதளா அஷ்டமி. தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் பொங்கல் விழா.

ஏப்ரல் 5, திங்கள்: அஷ்டமி. தாயமங்கலம் முத்துமாரி அம்மன் மின்விளக்கு தீப அலங்கார ரதோத்சவம். குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி.

ஏப்ரல் 6, செவ்வாய்: நவமி. ஒழுகைமங் கலம் மாரியம்மன் பவனி. சீதாதேவி விரதம். திருவோண விரதம். கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி சுவாமி திருக்கல்யாணம்.

ஏப்ரல்  7, புதன்: ஏகாதசி. தாயமங்கலம் முத்துமாரியம்மன் தீர்த்தவாரி. அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பூக்குழி விழா.

ஏப்ரல் 8, வியாழன்: துவாதசி. கரிவலம்வந்தநல்லூர் சுவாமி. அம்பாள் திருவீதிவுலா. சுவாமிமலை முருகன் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வைஷ்ண ஏகாதசி.

ஏப்ரல் 9, வெள்ளி: திரயோதசி . ஒழுகைமங்கலம் மாரியம்மன் பவனி. பாபநாசம் சிவபெருமான் ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு. திருக்குற்றாலம் குற்றாலநாதர் ரதோத்சவம். பிரதோஷம்.

Related Stories:

>