×

இந்த வாரம் என்ன விசேஷம்?

மார்ச் 27, சனி : சதுர்த்தசி. திருப்புல்லாணி ஜெகநாதப்பெருமாள் தண்டியலில் பாரிவேட்டைக்கு எழுந்தருளல். திருநெல்வேல் நெல்லையப்பர் பாண்டிய ராஜாவுக்கு செங்கோல் கொடுத்தருளல். நாமக்கல் லெட்சுமி நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி, ரங்கநாதர் அரங்கநாயகி திருக்கல்யாணம். மயிலம் தேர். பழநி ஸ்ரீமுருகன் திருக்கல்யாணம்.

மார்ச் 28, ஞாயிறு : பௌர்ணமி. பிரம்மசவர்ணி மன்வாதி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம். செட்டிக்குளம் சிவபெருமான் ரதோற்சவம். பங்குனி உத்திரம். பங்குனி உத்திரம்.

மார்ச் 29, திங்கள் : பிரதமை. இராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் திருவீதிவுலா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல். ஸ்ரீரங்கம் கோரதம்.   

மார்ச் 30, செவ்வாய் : துவிதியை. திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருக்கல்யாணம். மன்னார்குடி இராசகோபால சுவாமி விடையாற்று. தொட்டியம் காளியம்மன் ரதோத்சவம். காரைக்கால் அம்மையார் குருபூஜை. அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா அதிகாலை 4.0 மணியளவில்.

மார்ச் 31, புதன் : திரிதியை. திருப்பரங்குன்றம் ஆண்டவர் பெரிய வைரத்தேரில் ரதோத்சவம். தாயமங்கலம முத்துமாரியம்மன் திருவீதிவுலா. சங்கடகர சதுர்த்தி.

ஏப்ரல் 01, வியாழன் : சதுர்த்தி. தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருவீதிவுலா. திருவெள்ளறை சுவேததாத்திரிநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஆண்டவர் தேரோட்டம்.

ஏப்ரல் 02, வெள்ளி : பஞ்சமி. திருவெள்ளறை சுவேததாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்தில் திருவீதிவுலா. தாயமங்கலம் முத்துமாரியம்மன் புறப்பாடு.


Tags :
× RELATED காமதகனமூர்த்தி