×

சிவயோகம்

குமரி முதல் இமயம் வரை சிவவழிபாடு பரந்துள்ளது. வேத வேதாந்த நூல்கள், புராணம், இதிகாசம், ஆகமம், காவியம், தர்ம சாஸ்திரம் என அனைத்தும் சிவ தத்துவத்தை பலவிதங்களில் விவரிக்கின்றன. ‘நமஸ்ஸம்பவே ச மயோபவேச நமஸ் ஸங்கராயச மயஸ்கராய ச நமஸ்ஸிவாயச சிவதராயச’ என்று வேதமந்திரம் ‘சம்பு’ ‘சங்கரன்’ ‘சிவன்’ என்று மூன்று திவ்ய நாமங்களால் அந்த பராத்பரனை துதிக்கின்றது.

‘ஏகோருத்ர : ந த்விதீயா யதஸ்து:’ என்று எங்கும் வியாபித்துள்ள பரமேஸ்வரனை, ருத்ரனாக, இரண்டற்ற ஏக தத்துவமாக காட்டுகிறது.
‘சிவன், பரமேஸ்வரன், ம்ருடன், ஹரன், ருத்ரன், ம்ருத்யுஞ்ஜயன், மகாதேவன், பசுபதி, சதாசிவன்’- போன்ற பிரத்யேகமான நாமங்கள் சதாசிவனின் மிக உன்னத நிலையை பளிச்சென்று விளக்குகின்றன.

‘சிவயோகம்’ மிகவும் உயர்ந்ததென்று சாஸ்திரங்கள், சொல்வதோடு கூட, காஷ்மீர சைவம், சுத்த சைவ சித்தாந்தம், வீர சைவம், பாசுபதம், மிஸ்ர சைவம் போன்ற பல்வேறு சம்பிரதாயங்கள் இந்தியா முழுவதும் விரிவாகப் பரந்துள்ளன.

ஞானம் சிவமயம் சைவீ பக்தி: தியானம் சிவாத்மகம்!
சிவார்ச்சனா சிவவ்ரதம் சிவ யோகோஹி பஞ்சா !!

1.   சிவஞானம், 2. சிவ பக்தி, 3. சிவ தியானம், 4. சிவார்ச்சனை, 5. சிவ விரதம் -  இந்த ஐந்தும் சிவயோகம் எனப்படும். இவற்றை மேற்கொள்பவர் சிவயோகி.சிவன் என்ற சொல்லுக்கு அற்புதமான அர்த்தங்கள் நிறைய உள்ளன.
1.  ‘சிவன்’ என்றால், சுபம், க்ஷேமம், ஸ்ரேயஸ், மங்களம் என்பவை அகராதி கூறும் முக்கிய அர்த்தங்கள்.
2. ஜாக்கிரத், ஸ்வப்னம், சுஷூப்தி என்று மூன்று அவஸ்தைகளுக்கும் அதீதமான தியான அவஸ்தையில் உணரப்படும் ‘துரீய’ (சதுர்த்த) தத்துவமே சிவன்.
‘ப்ரபஞ்சோபசமம் சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம்

மன்யந்தே ஸ ஆத்மா சவிக்நேய :’- என்று மாண்டூக்யோபனிஷத்து, துரீய நிலையைச் சேர்ந்த சச்சிதானந்த ஸ்வரூபத்தை
‘சிவன்’ என்று ஸ்பஷ்டமாக தெரிவிக்கிறது. முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட நான்காவது நிலை பரம தத்துவமான சிவ தத்துவம், மனம் லயிக்கும் தியான சமாதி நிலையே மயானம், ‘ஸயானாத்வா சமனாத்வா ஸ்மஸானம்’ - லயமாகுமிடமே மயானம், மனோ நாசமே மோட்சம். அந்த சூட்சுமமான நிலையில் இருக்கும் அகண்ட சச்சிதானந்த தத்துவமே ‘மயான வா சியான சங்கரன்’. அனைத்தும் லயித்து விட்டபின் எது மீந்திருக்குமோ அதுவே சாஸ்வதமான பரம தத்துவம்.

‘சமாதி, மயானம்’- என்ற சொற்
களுக்கு யோக பரிபாஷையில் ‘பரிபூர்ண லய
ஸ்தானங்கள்’ என்று பொருள்.
3. அமைதியே சிவன். நிர்விகார நிச்சலன சாந்தநிலையே அடைய வேண்டிய திவ்யமான சிவ நிலை. ‘ஸ்தாணு, அசலன்’ என்ற சிவனின் நாமங்களுக்கு இதுவே பொருள்.

4. ‘ஆதித : பரிசுத்தத்வாத் மலத்ரய வியோகத :
சிவ இத்யுச்யதே ஸத்பி :’ என்பது ஆகம வாக்கியம். எந்த அஞ்ஞான மலமும் இல்லாத முழுமையான சுத்த தத்துவமே சிவன்.
5. ‘வச காந்தெள சிவ ஸ்ம்ருத :’ - என்பது மற்றுமொரு விளக்கம். அனைத்தையும் பிரகாசிக்கச் செய்யும் மூல சைதன்யமே சிவன்.  ‘வசி, சிவ’ - சர்வத்தையும் தன் வசத்தில் வைத்துள்ள சர்வேஸ்வரன்.

6.  ‘சர்வம் யஸ்மின் சேதே ஸர்வஸ்மின் யஸ்ஸேதே
இதி சிவ:’ அனைத்தும் யாரிடமிருக்கிறதோ, யார் அனைத்திடமும்
உள்ளாரோ, அனைத்திற்கும் ஆதாரமான அந்த சைதன்யமே சிவன்.
7. இச்சா சக்தியோடு கூடிய பரமேஸ்வரன் சிவன். இச்சா சக்தியிலேயே ஞான, கிரியா சக்திகள் கலந்துள்ளன.
8. ‘சிவ’ என்ற இரண்டு அட்சரங்களில் சக்தியும் ஐஸ்வர்யமும் மறைந்துள்ளன என்று சொல்லின் மேன்மையை விளக்கி மந்திர சாஸ்திரம் பொருள் கூறுகிறது.

மேலும் ‘சுபம்’, அமைதி, தூய்மை, முக்தி போன்ற பரம பலன்களை அளிப்பதே சிவனின் சுபாவம்.
‘‘சிவமிச்சேன் மனுஷ்யானாம் தஸ்மாத் சிவஇதி ஸ்ம்ருத:’’- என்று மகாபாரதம் கூறுகிறது.
தன் சக்தியால் சகல உலகையும் நிர்வாகம் செய்வதால், அந்த சக்தியை ‘அம்பாள், ஸ்வாமினி, சாம்புனி’ என்று அம்மையுடனிருப்பவராக ஐயனை வணங்குகிறோம். ஞானம் என்ற விழிப்புணர்வோடு அஞ்ஞான இருட்டை விரட்டும் சிவ சைதன்ய ஜோதிர் லிங்கத்தை தியானிக்கும் யோகமே சிவராத்திரி.

தெலுங்கு மூலம்: பிரம்ம சாமவேதம் சண்முகசர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

Tags :
× RELATED சுந்தர வேடம்