சிவராத்திரியின் நான்கு கால வழிபாடு

. இரவின் முதல் காலம்: சோமஸ்கந்தரை வழிபட வேண்டும். அப்போது பஞ்சகவ்ய அபிஷேகம் சிறந்தது. ரிக்வேதம் ஓத வேண்டும்.

வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்

அபிஷேகம் - பஞ்சகவ்யம்

அலங்காரம் - வில்வம்

அர்ச்சனை - தாமரை, அலரி

நிவேதனம் - பால் அன்னம், சக்கரைப்

பொங்கல்

பழம் - வில்வம்

பட்டு - செம்பட்டு

தோத்திரம் - ரிக்வேதம், சிவபுராணம்

மணம் - பச்சைக் கற்பூரம்,  சந்தனம்

புகை - சாம்பிராணி, சந்தனக்கட்டை

ஒளி- புஷ்பதீபம்

2. இரண்டாம் காலம்:  தென் முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். சிவலிங்கத்திற்கு தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. யஜுர் வேதம் ஓத வேண்டும்.

இரண்டாம் யாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்

அபிஷேகம் - பஞ்சாமிர்தம்

அலங்காரம் - குருந்தை

அர்ச்சனை - துளசி

நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்

பழம் - பலா

பட்டு - மஞ்சள் பட்டு

தோத்திரம் - யஜுர் வேதம், கீர்த்தித்

திருவகவல்

மணம் - அகில், சந்தனம்

புகை - சாம்பிராணி, குங்குமம்

ஒளி- நட்சத்திரதீபம்

3. மூன்றாம் காலம்: லிங்கோத்பவரை

வழிபடுவது சிறப்பு. திருவண்ணாமலையில் இந்த மூன்றாம் காலத்தில்தான் (ஜாமத்தில்) லிங்கோத்பவ உற்பத்தி ஆயிற்று என்று

புராணம் சொல்லுகிறது.

வழிபட வேண்டிய மூர்த்தம் - லிங்கோத்பவர்

அபிஷேகம் - தேன், பாலோதகம்

அலங்காரம் - கிளுவை, விளா

அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம்,

ஜாதி மலர்

நிவேதனம் - எள்அன்னம்

பழம் - மாதுளம்

பட்டு - வெண் பட்டு

தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி

மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தன

புகை - மேகம், கருங் குங்கிலியம்

ஒளி- ஐந்துமுக தீபம்

4. நான்காம் காலம்:  சிவராத்திரி நான்காம் காலத்தில் கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்வது சிறப்பு. கஸ்தூரி மேல் பூச்சாக பூசலாம். பச்சை ஆடை அணிவிக்கலாம். திருநாவுக்கரசர் பாடலைப் பாடலாம். அதர்வண வேதம் ஓதுதல் சிறந்தது. இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திர

சேகரர்(இடபாரூடர்)

அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்

அலங்காரம் - கரு நொச்சி

அர்ச்சனை - நந்தியாவட்டை

நிவேதனம் - வெறும் சாதம்

பழம் - நானாவித பழங்கள்

பட்டு - நீலப் பட்டு

தோத்திரம் - அதர்வண வேதம், போற்றித்திருவகவல்

மணம் - புனுகு சேர்ந்த சந்தனம்

புகை - கற்பூரம், லவங்கம்

ஒளி- மூன்று முக தீபம்.

- ஜெயலட்சுமி

Related Stories:

>