இந்த வாரம் என்ன விசேஷம்?

பிப் 20, சனி : அஷ்டமி. திருச்செந்தூர் முருகன் பவனி. மதுரை கூடலழகர் காலை கள்ளர் திருக்கோலமாய் காட்சி. குடந்தை சக்கரபாணி சந்திரப் பிரபையில் பவனி. திருக்கண்ணபுரம் சௌரிராசப் பெருமாள் திருவீதிவுலா.

பிப் 21, ஞாயிறு : நவமி. திருக்கண்ணபுரம் சௌரிராசப் பெருமாள் புறப்பாடு. திருச்செந்தூர் முருகப் பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. காரமடை அரங்கநாதர் புறப்பாடு.

பிப் 22, திங்கள் : தசமி. மதுரை கூடலழகர் வெண்ணெய்த்தாழி சேவை. காரமடை அரங்கநாதர் திருவீதிவுலா. திருச்செந்தூர் சுவாமி, அம்பாள் பவனி. காங்கேயம் முருகப் பெருமான் தெய்வானை திருமணக் காட்சி.

பிப் 23, செவ்வாய் : ஏகாதசி. காரமடை அரங்கநாதர் சிறிய திருவடிகளில் பவனி. திருச்செந்தூர் முருகப் பெருமான் உருகு சட்ட சேவை. நத்தம் மாரியம்மன் பாற்குட காட்சி.

பிப் 24, புதன் : துவாதசி. கோயம்புத்தூர் கோணியம்மன் பவனி.

பிப் 25, வியாழன் : திரயோதசி. வராக கல்பாதி. காரமடை அரங்கநாதர் திருக்கல்யாணம். கோயம்புத்தூர் கோனியம்மன் புறப்பாடு. பெருவயல் முருகப் பெருமான் புறப்பாடு.

பிப் 26, வெள்ளி : சதுர்த்தசி. கும்பகோணத்தில் மாசிமகப் பெருவிழா. மேலும், சிவாலயங்கள், வைஷ்ணவ ஆலயங்கள் மற்றும் புண்ணிய தீர்த்தங்களில் மாசிமக விழா நடைபெறும். திருச்செந்தூர், பெருவயல் இத்தலங்களில் முருகப்பெருமான் மகா ரதோற்சவம். மதுரை இன்மையில் நன்மை தருவார் ரதோற்சவம்.

Related Stories: