இயக்குனர்களுக்கு வலை வீசும் நடிகை

நடிகைகளில் ரம்பாவுக்கு தொடை அழகி என்று ரசிகர்கள் பட்டப்பெயர் கொடுத்திருந்தனர். பின்னர் அவர் உடல் எடை குறைத்துவிட்டார். உலா படத்தில் அறிமுகமானவர் பிரியா பானர்ஜி. இவர் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு 5 இந்தி படங்களில் நடித்திருந்தபோதும் இந்த ஆண்டில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டிலிருந்து எந்தவொரு படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. தன்னை இயக்குனர்களுக்கு ஞாபகப்படுத்து வதற்கு ஒரே வழி கவர்ச்சி படங்களை இணைய தளத்தில் வெளியிடுவதுதான் என்று எண்ணினார்.

பிரபல புகைப்பட நிபுணரை தனது கவர்ச்சி படங்கள் எடுக்க அழைத்திருந்தார். தனது தொடைப்பகுதி முழுவதும் பளிச்சென தெரியும் அளவுக்கு சிங்கிள் பீஸ் நீச்சல் உடைபோல் காஸ்டியூம் அணிந்து போஸ் அளித்தார். பின்னர் அந்தபடங்களை இணைய தளத்தில் வெளியிட்டார். இது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. அவர்கள் அவரது காலழகை வர்ணித்து கமென்ட் வெளியிட்டிருந்தனர். ஆனால் இயக்குனர்கள் பார்வையில் இப்படங்கள் தென்பட்ட தோ இல்லையோ தெரியவில்லை இன்னமும் புதிய படம் எதிலும் நடிக்க அழைப்பு வராமல் காத்திருக்கிறார் பிரியா பானர்ஜி.

× RELATED நயன்தாரா வசனத்தில் டபுள் மீனிங் படம்