இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜன 23, சனி : தசமி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் நந்தீஸ்வர வாகனத்தில் பவனி. பழனி ஆண்டவர் பவனி. திருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைரத் தேரில் ரதோற்சவம். கார்த்திகை விரதம்.

ஜன 24, ஞாயிறு : ஏகாதசி. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி. கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி புறப்பாடு. புத்ரத ஏகாதசி. திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகன் தெப்பத் திருவிழா.

ஜன 25, திங்கள் : துவாதசி. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வராள் சப்தாவரணம். பழனி ஆண்டவர் பவனி. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் ரதோற்சவம். கண்ணப்ப நாயனார்.

ஜன 26, செவ்வாய் : திரயோதசி. பிரதேஷம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வராள் காலை தங்கப் பல்லக்கு, இரவு ரிஷப சேவை தெப்பம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி. அரிவட்டய நாயனார்.

ஜன 27, புதன் : சதுர்த்தசி. திருச்சேறை சாரநாதர் வெண்ணெய்த் தாழி சேவை. கோயமுத்தூர் பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரதோற்சவம்.

ஜன 28, வியாழன் : பௌர்ணமி. வடசாவித்ரி விரதம். மதுரை சொக்கநாதர் வண்டியூர் எழுந்தருளி தெப்போற்சவப் பெருவிழா. திருச்சேறை சாரநாதர் ரதோற்சவம். தைப் பூசம். மன்னார்குடி அருள்மிகு சூட்டுக்கோல் இராமலிங்கசுவாமிகள் குருபூஜை. ஸ்ரீசேந்தனார் நாயனார்.

ஜன 29, வெள்ளி : பிரதமை. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பர் ஸௌந்திர சபா நடனம். வனசங்கரி பூசை. ஸ்ரீரங்கம் ஆளும் பல்லக்கு.

Related Stories:

>