சூர்ய ஸ்லோகம் (கோடை உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய வைசூரி போன்ற நோய் தாக்காதிருக்க)

பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி பரேஸாய நமோ நம:

அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோ நம:

கமலாஸன தேவேஸ பானு மூர்த்தே நமோ நம:

தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம:

- ஸ்ரீசூர்ய ஸ்தோத்திரம்

பொதுப் பொருள்: கையில் தாமரையைக் கொண்டவரே, பேரொளி ஸ்வரூபனாக உலகையே பராமரிப்பவரே, பரமேஸ்வரனே, சூர்ய தேவா, நமஸ்காரம். அனைத்து பிரமாண்டங்களுக்கும் காரணமானவரே, எல்லாவற்றிற்கும் சாட்சியாக விளங்குபவரே, சூரிய பகவானே, நமஸ்காரம்.

(இந்தத் துதியை கோடைகாலம் முழுவதும் தினமுமே சொல்லலாம்; குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் சொல்வது விசேஷம். கோடைக் கடுமையை பிற புற முயற்சிகளால் சமாளிப்பதோடு, அக முயற்சியாக இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம்.)

Related Stories: