உடற்பிணி போக்கும் உன்னத துதிகள்!: வராஹர் ஸ்லோகம் (மன, உடற் பிணிகள் நீங்க)

அப்யுந்தரந் அத தராம் தசனாக்ரலக்ந

முஸ்தாங்குராங்கித இவ அதிகபீவராத்மா

உத்தூத கோரஸிலிலாத் ஜலதே: உதஞ்சன்

க்ரீடா வராஹ வபு: ஈச்வர: பாஹி ரோகாத்

- வராஹ ஸ்லோகம்

(நாராயணீயம் தசகம்12)

பொதுப் பொருள்: என் ஐயனே குருவாயூரப்பா! ஒரு மாபெரும் மீட்சிக்காக சுயமாக விரும்பி வராஹ உருவம் கொண்ட பெரியவரே, அந்த உருவின் கோரைப்பற்களின் இடையே எளிதாக கிழங்கை நெம்பி எடுக்கும் பாவனையில், பூமியையே சுமந்து வந்தவரே, பிரமாண்டமான உடல் தோற்றம் கொண்ட அவதாரம் எடுத்தவரே, அலைகள் வீசும்  கடலின் அடியிலிருந்து பூமித்தாயை மீட்டுக் கொண்டுவந்த கருணா மூர்த்தியே, உமக்கு நமஸ்காரம். கொந்தளிக்கும் கடல் போலும், கலங்கிய கடல் போலும் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டிருக்கும் என்னை குணப்படுத்துவீராக. மீண்டும் உமக்கு நமஸ்காரம்.

(சனிக் கிழமைகளில் இத்துதியைக் கூறி வழிபட, குருவாயூரப்பன் திருவருளாலும், வராஹ மூர்த்தியின் பேரருளாலும் மன, உடற்பிணிகள் நீங்கும்.)

Related Stories:

>