×

இந்த வாரம் என்ன விசேஷம்?

டிச 5, சனி: பஞ்சமி. புதன், சுக்கிரனுக்கு மத்தியில் சூரியன் வரும் காலம் பானுமத்திம தோஷமாகும்.

டிச 6,  ஞாயிறு: சஷ்டி. சோளிங்கர் நரசிம்மர் சிறப்பு வழிபாடு. கோரக்கர் சித்தர் குருபூஜை. இன்று சூரிய வழிபாடு செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

டிச 7, திங்கள்: சப்தமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

டிச 8, செவ்வாய்: அஷ்டமி. கால பைரவாஷ்டமி. மஹாதேவாஷ்டமி. மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை.

டிச 9, புதன்: நவமி. ஆனாய நாயனார் குருபூஜை.

டிச  10,  வியாழன்: தசமி. ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேலுடன் தரிசனம்.

டிச11,வெள்ளி: ஏகாதசி. விஷ்ணு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு. கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை. சாஸ்தா, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை. சுடலைமாடசுவாமி, முனீஸ்வரன், மதுரை வீரன், காத்தவராயன், அய்யனார் உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்ய இன்று உகந்த நாள்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?