×

சனியை கட்டுப்படுத்தும் மார்த்தாண்ட பைரவர்

பைரவர் மந்திர, யந்திர, தந்திர நாயகராவார். பூத வேதாள பிரேத பிசாசுக் கூட்டங்களை விரட்டும் பெருங்கருணை உடையவர். இவரே சனீஸ்வர பகவானின் குருவாகவும் விளங்குகிறார். பைரவரை  வணங்குவதால் ஏழரை நாட்டுச் சனி, ஜென்மச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். பைரவரை வழிபட்டால் சகல சம்பத்துகளையும் பெறலாம் என்பதில் துளியும்  சந்தேகமில்லை.

இத்தனை சிறப்புமிக்க  பைரவர் சூரிய பகவானின் அம்சமாக மார்த்தாண்ட பைரவராக அருள்கிறார். லலிதா ஸஹஸ்ஹரநாமம் ‘‘மார்த்தாண்ட பைரவாராத்யா’’ (மார்த்தாண்டன் எனும் சூரியபகவானின்  அம்சமான பைரவரால் ஆராதிக்கப்படுபவள்) என இந்த பைரவரைப் போற்றுகிறது.  அகத்தியரும் தன்  ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தில் இந்த பைரவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். மார்த்தாண்ட  பைரவரின் த்யான ஸ்லோகத்தின்படி வரையப்பட்ட அபூர்வமான திருவுருவை தரிசித்து மகிழலாம்.

பரணிகுமார்

Tags : Marthanda Byrne ,Saturn ,
× RELATED சனிப்பெயர்ச்சி 3வது வாரம் குச்சனூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்