இந்த வாரம் என்ன விசேஷம்?

அக் 31, சனி: பௌர்ணமி. சிவாலயங்களில் அன்னாபிஷேகம். மாலையில் சிவாலய அம்பாளுக்கு சாந்தபிஷேகம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்ட நாதர், வைகுண்டம் புறப்பாடு. குருநானக் ஜெயந்தி.

நவ 1, ஞாயிறு: பிரதமை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை. பரணி - நெடுமாறநாயனார்.

நவ 2,  திங்கள்: கார்த்திகை விரதம். வேலூர் மாவட்ட ரத்தினகிரியில் ஸ்ரீபாலமுருகன் தங்க ரதக்காட்சி. கார்த்திகை - இடங்கழிநாயனார்.

நவ 3, செவ்வாய்: சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

நவ 4, புதன்: சதுர்த்தி. உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சந்நதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு. சங்கடஹர சதுர்த்தி.

நவ 5, வியாழன்: பஞ்சமி. அனைத்து சிவாலயங்களிலும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை.

நவ  6, வெள்ளி: சஷ்டி. மாயவரம் ஸ்ரீகௌரி மாயூரநாதர் உற்ஸவாரம்பம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. தன்வந்திரி சித்தர் குருபூஜை (வேதீஸ்வரன் கோயில்). தாத்தாசுவாமி சித்தர் குருபூஜை (கடலூர், விருத்தாசலம்).

Related Stories:

>