×

கல்வி வரமருளும் ஆலயங்கள்

* திருச்சி உத்தமர் கோயிலில் சரஸ்வதி தேவி தனிச் சந்நதி கொண்டு அருள்கிறாள். இவள் சந்நதியில் தரப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் மாணவர்களின் படிப்புக்கு ஊக்கமளிப்பது.

* நாகை மாவட்டம், பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில், கம்பருக்கு அருளிய சரஸ்வதி தேவி தனிக்கோயில்கொண்டிருக்கிறாள். படிப்பு வரம் அருள்வதில் நிகரற்ற அன்னை இவள்.

* கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இன்னம்பூர் திருத்தலத்தில் எழுத்தறிநாதர் என்ற நாமத்தில் ஈசன் அருள்புரிகிறார். இவர் கல்வி வளம் சிறக்க அருள்பவர்.

* வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் கலைமகளுக்கென ஓர் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி என்ற நாமத்தில் வாக்குதேவி அருள்கிறாள்.

* காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய பிராகாரத்தில் அருளும் கலைகளுக்கெல்லாம் அதிபதியாகத் திகழும் ராஜமாதங்கியை வணங்கி வேண்டிட, கல்வியில் மேன்மை பெறலாம்.

* சென்னை - போரூர், மதனனந்தபுரத்தில் உள்ள துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆலயத்தில் அன்னவாகனம் முன் நிற்க, சரஸ்வதி தனி சந்நதியில் அருள்கிறாள். இவளை வணங்கி, சகலகலாவல்லி மாலை துதியை பாராயணம் செய்ய அறிவுத்திறன் அதிகரிக்கும்.

* சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலத்தில் கிழக்கு முகமாய் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசம் செய்தருளிய தட்சிணாமூர்த்தி கல்விச் செல்வத்தை வாரியருளும் வரப்பிரசாதியாகப் போற்றப்படுகிறார்.

* தஞ்சாவூரில் உள்ள கண்டியூரில் பிரம்மசிரகண்டீஸ்வரர் ஆலயத்தில் தன் நாயகனான நான்முகனுடன் சரஸ்வதி தேவி அருள்கிறாள்.

* சென்னை -  சோழிங்கநல்லூர் ப்ரத்யங்கிரா ஆலயத்தில் அருளும் நீல சரஸ்வதி, கல்வியைப் பெருக்கி, வாக்கு வன்மையை அருள்பவள்.

* முழையூரில் எட்டுப்பட்டை லிங்க வடிவில் பரசுநாதர் நாமத்தில் சிவபெருமானும் ஞானாம்பிகை நாமத்தில் சிவகாமியும் அருளாட்சி புரிகின்றனர். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானம் அளிக்கிறாள். இந்த ஞானாம்பிகை.

* வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சரஸ்வதிதேவி கையில் வீணை வைத்திருக்கவில்லை.

* ஆந்திர மாநிலம் பாஸர் எனுமிடத்தில் சரஸ்வதிக்கென்று தனிக்கோயில் உள்ளது. இந்த சரஸ்வதி வரப்பிரசாதியாக மாணவர்களால் போற்றப்
படுகிறாள்.

தொகுப்பு: ஆர். அபிநயா

Tags : Churches ,
× RELATED தேவாலய பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்யானந்த் நியமனம்