இந்த வாரம் என்ன விசேஷம்

அக் 24, சனி: அஷ்டமி. ராமநாதபுரம் ஸ்ரீராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம். திருவோண விரதம். சதாபிஷேக ஸ்நானம்.

அக் 25, ஞாயிறு: நவமி. பூதத்தாழ்வார் திருநட்சத்திரம். மஹா நவமி. சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை.

அக் 26, திங்கள்: தசமி. குலசேகரப்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் மகிஷாசுரனை வதம் செய்தல். அம்பு விடுதல் காட்சி. விஜய தசமி. மத்வாச்சாரியார் ஜெயந்தி.

அக் 27, செவ்வாய்: ஏகாதசி. பேயாழ்வார் திருநட்சத்திரம்.

அக் 28, புதன்: துவாதசி. பிரதோஷம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.

அக் 29, வியாழன்: திரயோதசி. கடையம் ஸ்ரீவிஸ்வநாதர், தென்காசி ஸ்ரீஉலகம்மை விஸ்வநாதர் தலங்களில் திருக்கல்யாண வைபவம்.

அக் 30, வெள்ளி: பௌர்ணமி. சகல அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜை.

Related Stories:

>