×

பலன் தரும் ஸ்லோகம் (கல்வியில் மேன்மை பெறவும், ஞாபக சக்தி பெறவும்)

அவிச்ராந்தம் பத்யுர் - குணகண -
கதாம்ரேடனஜபாஜபாபுஷ்பச்
சாயா தவ ஜனனி ஜிஹ்வா
ஜயதி ஸாயதக்ராஸீநாயா:
ஸ்படிகத்ருஷ தச்சச்சவி -
மயீஸரஸ்வத்ய மூர்த்தி:
பரிணமதி மாணிக்யவபுஷா
- ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகம்


பொதுப்பொருள்: அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன். சரஸ்வதி பூஜை தினத்தன்று (25.10.2020) தினமும் 108 முறை 18 நாட்கள் பூஜையறையில் வடக்கு முகமாக அமர்ந்து இந்த துதியை பாராயணம் செய்ய ஞாபக சக்தி அதிகரித்து படிப்பில் சிறந்து விளங்கலாம். முடிந்தவர்கள் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து சாதம், பாயசம், மற்றும் ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, ஜாதிக்காய் போன்றவற்றைச் சேர்த்து செய்த தாம்பூலத்தையும் நிவேதனம் செய்யலாம். அதனால் கலைமகளின் திருவருள் சித்திக்கும்.

Tags :
× RELATED பலன் தரும் ஸ்லோகம்(கார்த்திகை தீபம் ஏற்றிய பலன் கிட்ட)