×

கதையின் நாயகன் ஆனார் செந்தில்

சென்னை: செந்தில் கதையின் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருடன் கூல் சுரேஷ், எம்எஸ் ஆரோன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் பொன்னம்பலம், கனல் கண்ணன், சென்ராயன், முரளி, பிரபாகரன், மகாநதி ஷங்கர், ஸ்ரீவித்யா, வாரியர் சதீஷ் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். பிஎம்எஸ் சினி என்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்தப் படத்தை முரளி பிரபாகரன் தயாரிக்கவுள்ளார்.

சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. பூஜையில் இயக்குனர் மோகன் ஜி, ரவிமரியா, ரானவ், சனம் ஷெட்டி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நாற்காலிக்கான போட்டியை கதைக்களமாக இந்தப் படம் கொண்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த போட்டி நான்கு கேங்ஸ்டர்களுக்கு இடையில் நடப்பதாகவும் இதில் வெல்லப்போவது யார் என்பதாக படத்தின் காட்சிகள் அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : Senthil ,Chennai ,Cool Suresh ,MS Aaron ,Ponnambalam ,Kanal Kannan ,Senrayan ,Murali ,Prabhakaran ,Mahanadi Shankar ,Srividya ,Warrier Sathish ,BMS Cine… ,
× RELATED டாஸ்மாக்கில் எந்த தவறும் நடக்கவில்லை;...