ஐதராபாத்: பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட், இந்தியில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய படத்தில் நடிக்க வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் ஆசை, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ‘ஆர் ஆர் ஆர்’ என்ற படத்தின் மூலம் நிறைவேறியது. இந்நிலையில், மீண்டும் அவர் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. ‘கல்கி 2898 ஏடி’ என்ற பான் இந்தியா படத்தின் 2வது பாகத்துக்கான படப்பிடிப்பு வரும் 2026 இறுதியில் தொடங்குகிறது.
முதல் பாகத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் நடித்தனர். இந்நிலையில், 2வது பாகத்துக்கு முன்பு ஒரு புதிய படத்தை இயக்க நாக் அஸ்வின் திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் கதை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்டது என்பதால், அலியா பட்டை அணுகி கதை சொன்னார். அவரும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்துக்கான ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் தொடங்கப் படுகிறது.