சென்னை, பிப்.17: தென்னிந்திய படவுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, பிராணிகள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். விலங்குகள் நல அமைப்பிலும் ஒரு பொறுப்பில் இருக்கிறார். தெருவோர நாய்களை நன்கு பராமரித்து, அதை மற்றவர்கள் வளர்க்க தத்து கொடுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு அவர் பாசத்துடன் வளர்த்த சோரோ என்ற நாய் திடீரென்று இறந்ததை துக்கத்துடன் தெரிவித்திருந்தார். தற்போது காதலர் தினத்தையொட்டி தனது வீட்டுக்கு வந்த புதுவரவு குறித்து திரிஷா தெரிவித்தார். அதன்படி, புதிய நாய்க்குட்டி ஒன்றை திரிஷா வாங்கியிருக்கிறார். அதற்கு செல்லமாக ‘இஸ்ஸி’ என்று பெயரிட்டுள்ளார்.