ஐதராபாத்: கடந்த 1950களில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப்படும் ‘காந்தா’ என்ற படத்தின் மூலமாக, தமிழில் பாக்யஸ்ரீ போர்ஸ் அறிமுகமாகிறார். நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் ஆழமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இதில் அவர் தனது கேரக்டருக்காக கடினமாக உழைத்து வருகிறார். தமிழ் தெரியாவிட்டாலும், படப்பிடிப்பில் உதவியாளர்கள் சொல்லிக்கொடுத்த தமிழை ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட பாக்யஸ்ரீ போர்ஸ், மொழியை தெரிந்துகொள்வதன் மூலமாக, தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு இன்னும் ஆழமாக உயிர் கொடுக்க முடியும் என்று நம்புகிறார். ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா படம் இது. தற்போது தெலுங்கில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள பாக்யஸ்ரீ போர்ஸ், கோலிவுட்டிலும் பலமாக காலூன்ற விரும்புகிறார்.