×

மார்கோ படத்தில் அதிக வன்முறை ஏன்? உன்னி முகுந்தன் விளக்கம்

திருவனந்தபுரம்: அளவுக்கதிகமான வன்முறை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்ற ‘மார்கோ’ என்ற மலையாளப் படம், இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. தற்போது ஓடிடி தளத்திலும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ஹீரோ உன்னி முகுந்தன் அளித்த பேட்டி வருமாறு: நமது அன்றாட வாழ்க்கையில் வன்முறை என்பது ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அதை மிகவும் உன்னிப்பாக கவனித்தால், சமூகத்தில் நடப்பதை ‘மார்கோ’வில் பத்து சதவீதம் கூட காட்டவில்லை என்றே நான் சொல்ல முடியும். மனித வளர்ச்சியின் ஒரு பகுதியாக வன்முறை இருப்பதை நம்புகிறேன். நாம் போர்களின் மூலமாகத்தான் சமாதானத்தை அடைந்தோம். அது தான் மனிதனின் இயற்கை. நமக்கு இதை அறிவியல் கற்றுக்கொடுத்தது. இதை நான் சொல்வது, திரையில் காட்டப்பட்ட வன்முறையை விற்பதற்காக இல்லை. சமூகத்தில் நம்மைச்சுற்றியும் வன்முறை இருக்கிறது என்பதையே சொல்கிறேன். என் வாழ்வில் நேரடியாக வன்முறையைப் பார்க்காமல் இருப்பதற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

Tags : Unni Mukundan ,Unni Mukundan… ,
× RELATED வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை அபேஸ் செய்த ஹீரோ