×

மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ஹார்ட்டின்

சென்னை: டிரைடென்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்க, கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் படம், ‘ஹார்ட்டின்’. திரைக்கு வந்த ‘மகான்’, ‘பேட்ட’, ‘ஜில் ஜங் ஜக்’ ஆகிய படங்களில் சனந்த் நடித்துள்ளார். ‘ஹார்ட்டின்’ படம் குறித்து கிஷோர் குமார் கூறுகையில், ‘ரோம்-காம் என்கிற காமெடி கலந்த காதல் கதை இது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்குகிறோம். 80 சதவீத படப்பிடிப்பு சென்னை, ஜெய்ப்பூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது. கோடை விடுமுறையில் படம் ரிலீசாகிறது’ என்றார். ‘கொலைகாரன்’ படத்தின் மூலம் பரிச்சயமான முகேஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘நேரம்’, ‘பிரேமம்’, ‘கோல்டு’ போன்ற சூப்பர் ஹிட் மலையாளப் படங்களுக்கு இசை அமைத்த ராஜேஷ் முருகேசன் இசை அமைக்கிறார். பரத் விக்ரமன் எடிட்டிங் செய்ய, ஜி.துரைராஜ் அரங்கம் அமைக்கிறார். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Tags : HARTIN ,MADONNA SEBASTIAN ,Chennai ,Trident Arts ,RAVINDRAN ,SANAND ,IMAYA ,KISHORE KUMAR ,JIL JUNG ZAK ,
× RELATED கோடை விடுமுறையால் சென்னை விமான...