அறிவோம் ஐவகை பிரதோஷங்கள்

பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு:  

1.நித்தியப் பிரதோஷம்,

2.பக்ஷப் பிரதோஷம்,

3.மாதப் பிரதோஷம்,

4.மகா பிரதோஷம்,

5.பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

நித்தியப் பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், ‘நித்தியப் பிரதோஷம்’ எனப்படும்.பக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.

மாதப் பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘மாதப் பிரதோஷம்’ எனப்படும்.மகா பிரதோஷம்: சிவபெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ எனப்படும்.

பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே ‘பிரளய பிரதோஷம்’ என அழைக்கப்படுகிறது.

தொகுப்பு: எஸ்.கிருஷ்ணஜா

Related Stories: