சென்னை: பிரெண்ட்ஸ் பிக்சர்ஸ், ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ‘மிக்சிங் காதல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. ஐ ஆர் 8, வாங்க வாங்க, குற்ற பின்னணி படங்களை இயக்கிய டைரக்டர் என்.பி. இஸ்மாயில் அடுத்த படைப்பாக மிக்சிங் காதல் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் கதாநாயகன மலையாள ஹீரோ சிண்டொ நடிக்கிறார். கதாநாயகியாக கன்னடத்து மாடல் சம்ஹிதா வின்யா தமிழில் அறிமுகமாகிறார் இவர்களுடன் திவ்யா பாவனா, பிரியங்கா அம்பானி, சங்கர் மகாலிங்கம், கண்ணன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு சாதிக் கபீர். ராஜேஷ் மோகன், கோனேஷ்வரன் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஒரு இளைஞனை நான்கு பெண்கள் காதலிக்கின்றார்கள். அந்த இளைஞன் யாரை காதலித்தார் என்பதை கலகலப்புடன் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறது படம். 2கே கிட்ஸ்களை மையப்படுத்தி அவர்களை கவரும் விதமாக படம் இளமையாக இருக்கும் என்கிறார் இயக்குனர். கேரளா, கர்நாடகா தமிழ்நாடு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.