×

ஹவுஸ் மேட்ஸ் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சென்னை: தர்ஷன், காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேலும், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் உள்ளிட்ட பலர் தர்ஷனுடன் நடித்துள்ளார்கள். இதனை புதுமுக இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர். ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தினை விஜய பிரகாஷ் மற்றும் சக்திவேல் இணைந்து தயாரித்துள்ளார்கள். இதன் ஒளிப்பதிவாளராக சதீஷ், இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஓர் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும், மிடில் கிளாஸ் குடும்பங்களின் அன்றாட உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும் படக்குழு உருவாக்கி இருக்கிறது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

Tags : Chennai ,Darshan ,Kaali Venkat ,Arsha Chandni Byju ,Vinodini ,Deena ,Abdul Lee ,Master Henrique ,Darshan.… ,
× RELATED சபரிமலை: 18 படி ஏறியதும் தரிசனம்: புதிய முறை அமல்