- சுசீந்திரன் லைச்சி
- சென்னை
- சுசீந்திரன்
- சிட்டி லைட் பிக்சர்ஸ்
- விக்னேஷ் சுப்ரமணியன்
- பிஎஸ்ஜி கல்லூரி
- கோயம்புத்தூர்
சென்னை: சிட்டி லைட் பிக்சர்ஸ் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘2கே லவ் ஸ்டோரி’. இப்படம் நாளை திரைக்கு வருகிறது. இதையொட்டி கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கு இத்திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுசீந்திரன் பேசியது: இது 2கே கிட்ஸுக்கான திரைப்படம். இந்த படத்தின் கதை விஸ்காம் மாணவர்களை சுற்றி நடப்பதால், அவர்களுக்கு போட்டு காண்பித்து அவர்களின் கருத்துகளை கேட்க விரும்பினேன்.
கடந்த 10ம் தேதி கோவை பிராட்வே தியேட்டரிலும் படத்தை திரையிட்டேன். பார்த்த அனைவரும் பாராட்டினார்கள். அப்போதே படம் வெற்றி என்பதை உணர முடிந்தது. அடுத்ததாக லயோலா கல்லூரி மாணவர்களுக்கு திரையிடுகிறோம். மாணவர்கள் தரும் வரவேற்பு உற்சாகம் அளிக்கிறது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி. இந்த படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தாருங்கள். இவ்வாறு சுசீந்திரன் பேசினார்.