×

‘விடா முயற்சி’ படத்துக்கு சிறப்புக் காட்சி: தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: அஜித் நடிப்பில் நாளை வெளியாகும் ‘விடா முயற்சி’ திரைப்படத்திற்கு 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று நாளை ஒரு நாள் மட்டும் ஒரு கூடுதல் காட்சி திரையிட்டு கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி காலை 9 மணி முதல் இரவு 2 மணிக்குள் 5 காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அஜித்குமார் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மற்றும் ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. கடைசியாக 2023, ஜனவரியில் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியானது. 2 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் அஜித் படமென்பதால் ‘விடா முயற்சி’ படத்துக்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

Tags : Tamil Nadu government ,Chennai ,Ajith ,
× RELATED சட்டப்பேரவையில் வேல்முருகன் பேசியதை...