×

அடங்காத சினம் கொண்ட ஆதி பைரவர்

ந.பரணிகுமார்

கோவை : அர்த்தநாரிபாளையம்

ஏக ஜோதி ஈசனின் 64 அம்சங்களில் முதன்மை அம்சமானவர் கால பைரவர். பைரவர் மேலும் அஷ்ட பைரவர்கள், 64 வகை பைரவர்கள் என 1500 க்கும் மேற்பட்ட ரூபங்கள் எடுத்துள்ளார் . எல்லா பைரவர்களுக்கும் முதன்மையானவர் ஆதி சிவனில் இருந்து தோன்றிய ஆதி பைரவர் ஆவார். இந்த சுயம்புநாதன் ஆதி பைரவருக்கு, பொள்ளாச்சி அருகில் உள்ள அர்த்தநாரிபாளையத்தில் திருத்தலம் எழுப்பப்பட்டு வருகிறது. ராமாயண காலத்தில் ராமர் சோலை என்ற பெயருடன் திகழ்ந்த இந்த இடத்தில் விஸ்வாமித்திரர் தவம் புரிந்து இருக்கிறார். முற்காலத்தில் இப்பகுதி கடலால் சூழப்பட்டு இருந்தது. அருகில் இருந்த நிலப்பகுதியை சேர மாமன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். இவன் மனைவியான மகாராணி அதி உன்னத சிவ பக்தை. எந்நேரமும் கையில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்து கொண்டிருப்பாள். ஒருமுறை மாமன்னனும் மகாராணியும் கடலாக இருந்த இத்திருத்தல பூமி வழியே பயணம் செய்தனர். எப்போதும் போல் மகாராணி கையில் சிவலிங்கம் வைத்திருந்தாள்.

அப்போது தவறுதலாக சிவலிங்கம் கடலுக்குள் விழுந்து விட்டது. மறுநொடியே மகாராணியும் கடலில் குதித்துவிட்டாள். இன்றும் இத்திருத்தலத்தின் பூமிக்கு பல்லாயிரம் அடி ஆழத்தில் இந்த சிவலிங்கம் உள்ளது. அதனை ஐந்து தலை கொண்ட நாகமும் கடலில் குதித்த அந்த மகாராணியும் காவல் காத்து கொண்டிருக்கிறார்கள் என்பது செவி வழி செய்தி.நினைத்த காரியம் கை கூடும் தலம். இத்தலத்தில் 1500 பைரவர்கள் அதிர்வலையுடன், 368 கைலாச தேவதைகளின் அருளுடன், 18 நிலை கொண்ட கருப்பசாமிகளின் காவலுடன், 34 நிலை காளிகளின் கண்காணிப்பில் அடங்காத சினம் கொண்ட ஆதி பைரவர், அடங்காத அன்பு கொண்ட ஆதி பைரவியுடன் மூலவர் எழுந்தருள உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள தென் அர்த்தநாரிபாளையம் என்ற அழகிய கிராமத்தில் அடங்காத சினம் கொண்ட ஆதி பைரவர் எழுந்தருள உள்ளார். பொள்ளாச்சியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.

அலய தொடர்புக்கு 9884202619.

11.08.2020 திங்கள்கிழமை அன்று ஆடி மாத சிறப்பு தேய்பிறை அஷ்டமி வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

Tags : Adi Bhairav ,
× RELATED தாயுடன் முன்விரோதத்தால் ஆத்திரம்...