சோதனை கடவுள் அளிக்கும் பயிற்சி

கிறிஸ்துவம் காட்டும் பாதை

‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,

தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’

புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும் நமக்கெதிராய் வெள்ளம் போல் நம்மை மூழ்கடிக்கும். எனவே இச்சுமைகளை உதறித் தள்ளிவிட்டு, நமக்கு குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நம் நம்பிக்கையையும், நம்மை வழி நடத்துபவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம் கண்களைப் பதிய வைப்போம்.

நம் அன்பு தந்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இழிவையும் பொருட்படுத்தாமல் மனிதர்களாகிய நமது பாவங்களைப் பொருட்படுத்தாமல் மனிதர்களாகிய நமது பாவங்களைப் போக்கவே, அவர் தன்னைத்தானே அச்சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார். பாவிகளாகிய நம்மால் அவருக்கு உண்டான எல்லாம் எதிர்ப்பையும், அவமானங்களையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பார்ப்போம்.

ஆண்டவர் நமக்கு அருளிய அறிவுரைகளையும், கட்டளைகளையும் நாம் நமது வாழ்விலே கடைப்பிடித்து வாழ்வோம். ‘‘தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார். ஆண்டவர் தாம் யாரிடம் அன்புக் கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்’’ (எபிரேயர் 12 :6) கடவுள் நம்மை தன் பிள்ளைகளாக நடத்துகிறார். எனவே நம்மை கண்டித்து திருத்துகிறார். திருத்தப்படுவதற்காக சில துன்பங்களைத் தாங்கிக் கொள்வோம். நம்மை படைத்த நம் விண்ணக தந்தைக்கு நாம் பணிந்து நடக்கவேண்டும் அல்லவா? கடவுள், நமது நலனுக்காகவும், நாம் அவருடைய தூய்மையில் பங்கு கொள்ள வேண்டு மென்பதற்காகவுமே நம்மை கண்டித்து திருத்துகிறார். இவ்வாறு கடவுள் நம்மை திருத்தப்படும்போது நமக்கு கசப்பாகவே தோன்றும். ஆனால், இவ்வாறு கடவுளிடத்திலே பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும், நேர்மையான வாழ்க்கையையும் பயனாக பெற்றுள்ளனர் என்பதனை அறிந்து நாமும் பயிற்சி பெறுவோம்.

எனவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அளிக்கும் பயிற்ச்சிகளை, நாம் பெற்றுக்கொண்டு அதன்படி வாழ்ந்து, நாமும் பயிற்சியாளர்களாகி, மற்றவர்களையும் ஆண்டவருக்கேற்ற வாழ்கை வாழவும், அவரது பாதையில் செல்லவும், அவர்களை பயிற்றுவிப்போம்.

- ஜெரால்டின் ஜெனிபர்

Related Stories: