ஆவணி அவிட்டம் விரத முறை மற்றும் பலன்கள்

கணபதி பூஜையுடன் இவ்விரதத்தை துவங்கி, புண்யாவாகனம் செய்த பின், பஞ்சகவ்யம் அருந்தி உடல், மனம், இருப்பிடங்களைத் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வேளையில் கிழக்கு நுனியாக வாழை இலை போட்டு, அதில் அரிசி பரப்பி 7 கொட்டைப் பாக்குகள் வைத்து, அதில் சப்த ரிஷிகளை ஆவா ஹனம் செய்து, தீபாராதனை செய்து, நைவேத்தியம் படைக்க வேண்டும். பின், சப்தரிஷிகளை வேண்டி ஹோமம் செய்ய வேண்டும். அதில் அரசு அல்லது புரசு சமித்துக்கள் (குச்சிகள்), சத்து மாவு, நெய், நெல்பொரி ஆகியவற்றை மந்திரம் சொல்லி அக்னியில் இட வேண்டும். பின், புதிய பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் பஞ்ச பூதங்களையும் வழிபடலாம்.

திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் தானமாகத் தரலாம். புதிய பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், பின்னர் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். இவர்களில் தந்தையை இழந்தவர்கள் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்தபிறகு தங்களுடைய பிதுர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு பிறகு குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் வெற்றிலை பாக்கு, பழம் மற்றும் அவர்கள் சக்திக்குத் தகுந்தாற்போல் காணிக்கைகளை அளித்து அவர்களின் ஆசிர்வாதம் பெற வேண்டும்.

Related Stories:

>