ஆவணி அவிட்டம் என்றால் என்ன?

சென்னை : ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமியில் கடைபிடிக்கும் ஒரு வழிபாடு ஆகும். இது ரிக், யசுர் வேதிகள் கொண்டாடும் தினம். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். ஆவணி அவிட்டம் என்பது ஓர் கூட்டுவழிபாடாகும்.

இந்த நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ, குளக்கரையிலோ குளித்து இச்சடங்க உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பித்து, வேதங்களை படிக்கவும் தொடங்குவர்.

Related Stories: