×

தயாரிப்பாளர் ஆனார் சிம்பு: பிறந்த நாளில் 4 படங்கள் அறிவிப்பு

சென்னை: தனது பிறந்த நாளில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சிம்பு. சிம்புவுக்கு நேற்று பிறந்த நாள். இந்நிலையில் அட்மன் சினி ஆர்ட்ஸ் என்கிற பெயரில் சிம்பு புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் அவர் தயாரிக்கும் முதல் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இது சரித்திர கதை படமாக உருவாகிறது. இதில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சிம்புவின் பிறந்த தினத்தில் மேலும் புதிய படங்களின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அதில் கமல்ஹாசனுடன் அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5ம் தேதி ரிலீசாகிறது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் புது படத்தில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்தை ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இது சிம்புவின் 49வது படமாகும். அட்மன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் படம் அவரது 50வது படமாகும். இதையடுத்து 51 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிவிட்டு, இப்போது ‘டிராகன்’ படத்தை இயக்கி வரும் அஷ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார்.

Tags : Simbu ,Chennai ,Adman Cine Arts ,
× RELATED பொது அமைதி மற்றும் மத...