நாளை நிகழ்கிறது அதிசக்தி வாய்ந்த சூரிய கிரகணம் : என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

அதிசக்திவாய்ந்த சூரிய கிரகணம் என்று இந்த கிரகண காலத்தை சொல்வதால், முதலில் இதை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. ஆனால், முடிந்தவரை இந்த கிரகண நேரத்தில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த வருடத்தின் மிகப்பெரிய சூரிய கிரகணம் என்று சொல்லப்படும் இந்த கிரகண நேரத்தில், என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சூரிய கிரகணம் நெருப்பு வளையத்திற்குள் நிகழப் போவதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்பட்டுள்ளது. மிக நீண்ட நேரம் நடக்கக்கூடிய இந்த கிரகணமானது நாளை காலை 10.22 மணியிலிருந்து மதியம் 01.42 மணிவரை நிகழவிருக்கிறது. இந்த நேரத்தில் கட்டாயம் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. வெறும் கண்களால் சூரியனை பார்க்கக்கூடாது. அப்படி பார்க்கும் பட்சத்தில், கிரகணம் வெறும் கண்களில் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 நாளை முடிந்தவரை காலை, 8.00 மணிக்கு முன்பாகவே, உங்களது காலை உணவை முடித்து விட வேண்டும். கிரகண நேரத்திற்க்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. உடல்நிலை சரியில்லாதவர்களுக இருந்தால், கட்டாயம் உணவு சாப்பிட வேண்டும், உணவு சாப்பிடாமல் இருக்க முடியாது, என்ற சூழ்நிலை இருந்தால், பழவகைகள் அல்லது நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை சமைத்த உணவை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளவும். கர்ப்பிணிப் பெண்கள் முடிந்தவரை கிரகண நேரத்தில் சமைத்த உணவை சாப்பிடவே கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. சூரிய வெளிச்சம் கர்ப்பிணி பெண்களின் மேல் படவே கூடாது. உங்கள் அறையில் இருக்கும் ஜன்னல் கதவுகளை அடைத்து ஸ்க்ரீன் போட்டுக் கொள்வது மிகவும் நல்லது. உங்களின் பாதுகாப்புக்காக தருப்பைப்புல் உங்கள் கையில் வைத்துக் கொள்வது இன்னும் உத்தமமான செயலாக சொல்லப்பட்டுள்ளது. தர்ப்பைப்புல் லோடு, 1 இனுக்கு வேப்பிலையையும் உங்களது தலையில் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. உங்களுக்கு அது ஒரு பாதுகாப்பு வளையத்தை எடுத்துவிடும்.

தர்ப்பைப் புல்லுக்கு எந்த ஒரு தோஷமும் அண்டாத இயல்பு, இயற்கையாகவே உள்ளது. தர்பை புல் விலையும் இடத்தில், சர்ப்பம் வராது என்றும் சொல்லப்பட்டுள்ளது. ராகு கேது என்பது பாம்பின் அம்சம். ராகு கேது சூரியனை விழுங்குவதால் தான் கிரகணம் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் தர்ப்பைப் புல்லை கிரக காலத்தில் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள். நம் வீட்டில் சமைத்து வைத்திருக்கும் பொருட்கள், குடிதண்ணீர் இவைகளில் மேல் ஒரு தர்ப்பைப் புல்லை வைப்பது மிகவும் நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

கிரஹண காலத்தில் என்ன செய்தால் மிகவும் நல்லது? கிரகண ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் குளித்து விட வேண்டும். பூஜை அறையில் அமர்ந்து, உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் நல்லது. ‘ஓம் நமசிவாய’ ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை உச்சரிக்கலாம். உங்களது மனதை முழுமையாக இறைவழிபாட்டில் ஈடுபடுத்துங்கள். இந்த கிரகண நேரத்தில் நாம் செய்யக்கூடிய வேண்டுதல்களுக்கு இரு மடங்கு சக்தி இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே மனதை ஒருநிலைப்படுத்தி இறை வழிபாடு செய்வது நல்லது.

கிரகண காலம் முடிந்தவுடன், நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு உப்பையும், ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் போட்டு தலைக்கு குளித்துவிட்டீர்கள் என்றால், கிரகணத்தின் போது உங்களது உடம்பில் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டு இருந்தாலும் கூட, அந்த தாக்கமானது, அந்த தோஷமானது முழுமையாக நீங்கிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த கிரகண காலத்தில் முடிந்தவரை யாரும் வெளியில் வர வேண்டாம், வெறும் கண்களோடு சூரியனை கட்டாயம் பார்க்கக் கூடாது, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Related Stories: