வெற்றியைத் தேடித் தரும் வெற்றிலை தண்ணீர்!

லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு பொருள் வெற்றிலை. ‘வெற்றியை தரும் வெற்றிலை’. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வெள்ளிக்கிழமை பூஜை அன்று வெற்றிலை பாக்கு வைத்து மகாலட்சுமியை, வாரம் தோறும் தொடர்ந்து 48 வாருங்கள், வழிபட்டு வந்தோமேயானால், நமக்கு இருக்கின்ற கஷ்டங்கள் அனைத்தும் கட்டாயம் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போகும் என்பது நிதர்சனமான உண்மை. இன்றைய சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை பூஜையில் பலபேர் வெற்றிலை பாக்கு தாம்பூலத்தை பூஜை அறையில் வைப்பதில்லை என்பதும் உண்மையான ஒன்று. இனி உங்கள் வீட்டுல் வெள்ளிக்கிழமை பூஜையில் வெற்றிலை பாக்கை மறக்காமல் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்யுங்கள். இந்த வெற்றிலையை வைத்து, வெற்றிலை தீர்த்தத்தை தயார் செய்யப் போகின்றோம். அந்த தீர்த்தத்தை எப்படி தயார் செய்ய வேண்டும்?

வெற்றிலையோடு சேர்த்து அந்த தீர்த்தத்தில் போட வேண்டிய பொருட்கள் என்னென்ன? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால், இந்த வெற்றிலையோடு, நன்னாரிவேர் 2 துண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், பச்சைகற்பூரம் ஒரு சிறிய துண்டு, ஜவ்வாது தூள் ஒரு சிட்டிகை, இவை அனைத்தையும் சேர்க்கப் போகின்றோம். உங்கள் வீட்டில் பித்தளை அல்லது செம்பு சொம்பை எடுத்துக் கொள்ளவேண்டும். சுத்தமான நீரை ஊற்றி அதில் மேற்குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் போட்டு விடவேண்டும். நறுமணம் மிக்க இந்த தண்ணீருக்குள், வெற்றிலைக்காம்பு மேல் பக்கத்தில் இருக்கும் படி, வெற்றிலை ஒன்றை தண்ணீரில் மூழ்க வைத்து விடுங்கள்.

இதை எப்போது செய்யவேண்டும்? வெள்ளிக்கிழமை காலை மகாலட்சுமி பூஜை செய்யும்போது இந்த சொம்பை தயார் செய்து, மகாலட்சுமி தாயாரின் முன்பு வைத்து, பூஜை செய்ய வேண்டும்.  மாலை, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த சொம்பில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து, அந்த வெற்றியினால் உங்கள் வீட்டு மூலைமுடுக்குகளில் தெளித்து விட வேண்டும். சமையலறை, படுக்கையறை, வரவேற்பறை இப்படி உங்கள் வீட்டில் எவ்வளவு அறைகள் இருக்கின்றதோ! அந்த அறைகள் முழுவதிலும் இந்த தண்ணீர் படும் அளவிற்கு தெளித்து விட்டீர்கள் என்றால், மூதேவி உங்கள் வீட்டில் வாசம் செய்யவே மாட்டாள். நறுமணமிக்க இந்த தீர்த்தமானது வீட்டில் சந்தோஷத்தை நிலையாக வைத்திருக்கும். பணக்கஷ்டம் ஏற்படாது. மனக்கஷ்டம் ஏற்படாது. சண்டை சச்சரவு ஏற்படாது. நோய் நொடிகள் இல்லாத வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு இது ஒரு சிறந்த முறை. உங்கள் வீட்டில் தோல்விக்கு கட்டாயம் இடம் இருக்காது என்ற கருத்தை முன்வைத்து அந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Related Stories: