×

இன்று சந்திர கிரகணம்: கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை என்ன?

சந்திர கிரஹணம் ஜூன் 5ஆம் தேதி இரவு 11.16 மணியில் இருந்து 02.32 மணி வரை, மொத்தம் மூன்று மணி நேரம் தொடரப் போகின்றது. ஆனால், இந்த சந்திர கிரகமானமானது, இந்தியாவில் நிழல் கிரகணம் போல்தான் தோன்றும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா இந்த நாடுகளில் முழுமையாக பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சந்திர கிரகண நேரத்தில், பூமியில் நம் கண்ணுக்கு தெரியாத சில மாற்றங்கள் நடைபெறத் தான் செய்யும். அப்படி இருக்கும் பட்சத்தில், கிரகணம் ஏற்படக்கூடிய இந்த மூன்று மணி நேரத்தை நாம் எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே கிரகண நேரத்தில் மாந்திரீகம், தாந்திரீகம் மற்றும் மந்திரங்களுக்கு அதிகப்படியான உரு ஏற்றும் வேலை செய்யப்படும்.

ஏனென்றால், இந்த சமயங்களில் தெய்வங்களின் ஆதிக்கமானது பூமியில் நிறுத்தி வைக்கப்படும் என்பதும் நம்முடைய சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சில தெய்வங்களை இந்த கிரக நேரங்களிலும் வழிபடலாம் என்றும், அந்த தெய்வங்களுடைய சக்தியானது, எந்த காலத்திலும் குறையாமல் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக சிவனின் மந்திரத்தை உச்சரிக்கலாம். சக்திதேவியின் மந்திரத்தை உச்சரிக்கலாம். ஆஞ்சநேயரின் மந்திரத்தை உச்சரிக்கலாம். சிலபேர் சிந்தாமணி மந்திரத்தை உச்சரிப்பார்கள். மிகவும் சக்தி வாய்ந்த, கோபம் உடைய தெய்வங்களை இந்த சமயத்தில் வழிபடுவது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய மனதில் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் ஒரு காரியத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாலும், இந்த கிரகண நேரத்தில் நேரத்தில் வேண்டிக் கொள்வது மிகவும் நல்லது.

அந்த காரியம் சீக்கிரமே நிறைவேறும் என்பதும், நிறைவேறிய அந்த காரியத்தை நிரந்தரமாக நம்மிடமே தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, உங்களுக்கு அதிகப்படியான செல்வம் கிடைக்க வேண்டும் என்றும், அந்த செல்வம் நம்மிடமே நிலைத்திருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளலாம். இல்லையென்றால், நல்ல வேலை கிடைக்கவேண்டும். கிடைத்த வேலையானது நம் வாழ்நாள் முழுவதும் நிலையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளலாம். இப்படி உங்கள் இஷ்டம்போல், உங்கள் மனதில் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இது தக்க சமயமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகமானது தொடங்கக் கூடிய அந்த நேரத்தில், பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இரவு 11.16 மணிக்கு மேல் 02.32 மணிக்குள் இந்த மந்திரத்தை எப்போது வேண்டுமென்றாலும் உச்சரிக்கலாம்.

நினைத்ததை நிறைவேற்றும் சிவமந்திரம் உங்களுக்காக இதோ!

“ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா!”

இந்த மந்திரத்தை வெறும் 27 முறை உச்சரித்தால் மட்டுமே போதும். அதன் பின்பு கிரகண வேளையில், ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்கலாம். ‘ஸ்ரீ ராம ஜெயம்’ சொல்லலாம். சக்தி வாய்ந்த அம்மனை வழிபடலாம். இப்படி செய்யும் பட்சத்தில், நம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் அந்தக் குறிக்கோளானது நிறைவேறி, நம்மிடமே நிலைத்து நிற்க, நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான 3 மணி நேரம், இந்த சந்திர கிரகண நேரம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?