அற்புதம் நிகழ்த்தும் சாயி மந்திரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளும்..!

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம்

Advertising
Advertising

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

சச்சிதானந்தாய தீமஹி

தன்னோ சாய் ப்ரசோதயாத்

தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

ஷீரடி சாயிபாபாவின் த்யான ஸ்லோகம்

பத்ரி க்ராம ஸமத் புதம்

த்வாரகா மாயீ வாசினம்

பக்தா பீஷ்டம் இதம் தேவம்

ஸாயி நாதம் நமாமி

ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்

“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”

நோய் தீர்க்கும் மட்டைத்தேங்காய் பரிகாரம்

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 மட்டைத் தேங்காய்களை எடுத்துக் கொண்டு பாபா ஆலயத்திற்குச் சென்று, அவற்றில் 10 தேங்காய்களை ‘துனி’ (அணையா நெருப்பு) முன் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும். மீதி ஒரு தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதிலிருந்து தமக்குத் தெரிந்த ஏதேனும் இனிப்பைச் செய்து பாபாவிற்கு நிவேதிக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சிறிதளவு பிரசாதமாக உண்டு, மீதியை தானம் செய்தால் அந்த நோயின் கடுமை நிச்சயம் குறைந்து விடும்.

Related Stories: