இசக்கியம்மனை சாந்தப்படுத்திய அவ்வையார்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ளது முப்பந்தல். இங்குள்ள இசக்கிஅம்மன் கோயிலில் அவ்வையாருக்கு தனி சந்நதி உள்ளது.  ஒருநாள் இசக்கிஅம்மைக்கு பூஜை நடந்து முடிந்த நேரம் அவ்வையார் அவ்விடம் வந்தாள். நான் அனுதினமும் வழிபடும் அந்த சதா சிவனின் இடப்பாகம் அமர்ந்திருக்கும் உமையாளா நீ, நம்ப முடியவில்லை, கண்களை மிரட்டி, நாக்கை நீட்டி, கோர பற்களை காட்டி நிற்கின்றாய். ஏன் இந்த உக்கிர தோற்றம், மங்களகரமாக காட்சி தரக்கூடாதா என்று கேட்டதும் சிலையிலிருந்து ஒரு ஒளித்தோற்றம் அவ்வையே, இவ்விடம் உற்று நோக்கு, என்று குரல் கேட்க, பார்த்தாள் ஔவை, அப்போது நின்ற கோலத்தில் சாந்தினியாக காட்சி அளித்தாள் இசக்கியம்மன். முகமலர்ந்த ஔவை, ‘‘தேவி, என்றென்றும் சாந்த ரூபினியாக, இப்படி கல்யாண சுந்தரியாக இருக்க வேண்டும் என்று கூறினாள். அப்போது பேசிய இசக்கியம்மன், இவ்விடமே இருந்து பார் என்றுரைத்தாள் இசக்கியம்மன். அதன்படி முப்பந்தலில் அவ்வையாருக்கு தனிச்சந்நதி அமைந்துள்ளது.

சு. இளம் கலைமாறன்.

Related Stories:

>