
சென்னை: கிடுகு திரைப்படம் வேளாங்கண்ணியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மதுரையில் இருந்து கிளம்பிய நான்கு நண்பர்கள் வேளாங்கண்ணியில் ஒரு பாதிக்கப்பட்ட திருநங்கைக்கு உதவி செய்கிறார்கள். அரசியல்வாதி சமூகவிரோதிகள் காவல்துறை என அனைவரையும் திட்டமிட்டு கொடூரமான முறையில் கொலை செய்கின்றனர். படத்தில் கல்லூரி வினோத், மணிமாறன், பீட்டர், சரவணன், சசிகலா, சந்துரு, காளி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை ஜெர்சன். எடிட்டிங் ஆரஞ்சு சிவா.
பாடல் வரிகள் ஜிஜி. விக்னேஷ். வீரமுருகன் இந்த படத்தை இயக்கி, தயாரித்து உள்ளார். 2023 ஆம் ஆண்டு வெளியான கிடுகு படம் சென்சாரில் ஆறு மாத காலம் தாமதமாகி 270 சென்சார் கட் செய்யப்பட்டது. அதன்பின் வெளியானது. இப்போது இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு குமரி விஜயன் யூடியூப் சேனலில் பிப்ரவரி 11 தைப்பூச திருநாளில் வெளியாகிறது என்று படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.

