சென்னை: வித்தியாசமான தோற்றங்களில் விக்ரம் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ள படம், ‘வீர தீர சூரன்: பார்ட் 2’. இதை எஸ்.யு.அருண்குமார் எழுதி இயக்கியுள்ளார். விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு உள்பட பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஜி.கே.பிரசன்னா எடிட்டிங் செய்ய, சி.எஸ்.பாலசந்தர் அரங்குகள் அமைத்துள்ளார். முழுநீள ஆக்ஷன் திரில்லர் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இதை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார்.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே கிளிம்ப்ஸ், டீசர், பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில், இப்படம் வரும் மார்ச் 27ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாகம் உருவாகாத நிலையில், ‘வீர தீர சூரன்’ படத்தின் 2வது பாகம் முதலில் திரைக்கு வருவது, ரசிகர்களிடையே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகமாக்கியுள்ளது.