×

பிரபாஸ் படத்திலிருந்து மாளவிகா காட்சி லீக்: படக்குழு அதிர்ச்சி

ஐதராபாத்: பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி ராஜா சாப்’. இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விஷ்வ பிரசாத் தயாரித்து வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் இருந்து மாளவிகா மோகனன் நடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதில் சண்டைக் காட்சியில் அவர் நடிக்கிறார். அது படமாக்கப்பட்ட போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து இந்த வீடியோ வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Malavika ,Prabhas' ,Hyderabad ,Prabhas ,Maruti ,Malavika Mohanan ,Nidhi Agarwal ,Vishwa Prasad ,Thaman ,
× RELATED பெண் குழந்தை வேண்டாம் சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை