சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. கிரியேட்டிவ் எண்டர்டெயிண்ட்மெண்ட் சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. படக்குழுவினர் தங்களது அனுபவங்கள் குறித்து பேசினர்.
தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…
இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார். இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது. இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
நடிகர் பாலசரவணன் பேசியதாவது…
எனக்கு இந்த அருமையான படத்தில் வாய்ப்பு தந்த, சுசீந்திரன் சாருக்கு நன்றி. இந்தப்படம் பார்த்து, அத்தனை வேலைகளுக்கு மத்தியில் என்னை அழைத்துப் பாராட்டிய இமான் சாருக்கு நன்றி. 2கே கிட் படத்தில் எனக்கு என்ன வேலை என என் வீட்டிலும் கேட்டார்கள், நான் 2கே கிட்டாக நடிக்கிறேன் என சொல்லவே இல்லை. இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமென நான் நினைக்கவே
இயக்குநர் எழில் பேசியதாவது…
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களும் அத்தனை அற்புதமாக இருந்தது. இத்தனை நடிகர்களை வைத்து, எப்படி இதை எடுத்தார்? என ஆச்சரியமாக உள்ளது. 2கே கிட்ஸை வைத்து என்ன கதை சொல்லப் போகிறார் என்கிற ஆவலும் உள்ளது. இன்றைய இளைஞர்களின் உலகம் புதிதாக இருக்கிறது, அதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் அதைப் புரிந்து கொண்டு, அவர்கள் உலகத்திற்குள் நுழைந்து, அடுத்த கட்டத்திற்கு ஒரு படத்தைச் செய்துள்ளார் சுசீந்திரன். நடிகர்கள் எல்லோரும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மிகப் பிரமாதமாக உள்ளது. அத்தனை விஷயமும் இப்படத்திற்கு மிக சரியாக அமைந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசியதாவது…
சுசீந்திரன் சாருடன் இது எனது மூன்றாவது படம், ஆனால் எல்லோரும் இங்கு 5வது படம், 6வது படம் என்கிறார்கள், இத்தனை பேருக்கு வாய்ப்பும், வாழ்க்கையும் தந்த சுசி சாருக்கு நன்றி. “கென்னடி கிளப்” படத்தில் எனக்கு நல்ல பாடல்கள் தந்த இமான் சார், இந்த படத்திலும் அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். படம் மிக அழகான படமாக, அருமையான படைப்பாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
அறிமுக நாயகன் ஜெகவீர் பேசியதாவது..
கடவுளுக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி. என் முதல் படத்திற்கு இமான் சார் இசையமைப்பது மகிழ்ச்சி. சுசி சார், இமான் சார், நல்ல கலைஞர்கள் என்பதைத் தாண்டி, நல்ல மனிதர்கள். எங்களது படம் வெளியீட்டிற்காக தனஞ்செயன் சாரிடம் சென்றிருப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் உடன் நடித்த பாலசரவணன், மீனாட்சி எல்லோரும் ஆதரவாக இருந்தார்கள். இப்படம் மிக நல்ல படைப்பாக வந்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி உங்கள் லவ்வரோடு போய்ப் பாருங்கள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். நன்றி.
இசையமைப்பாளர் இமான் பேசியதாவது..
சிட்டி லைட் பிக்சர்ஸ்க்கு இந்தப்படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். சுசி சாரின் நல்ல மனதிற்கும், புதிய முயற்சிக்கும் இப்படம் பெரிய வெற்றி பெறும். சுசி சாருடன் இது எனக்கு 9வது படம். ஒரு இயக்குநருடன் நான் தொடர்ந்து படங்கள் செய்வேன் ஆனால் அது ஒரே மாதிரி படமாகத்தான் இருக்கும், ஆனால் சுசி சார் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜானரில் அசத்துவார். இந்தப்படத்தில் 2கே கிட்ஸ் உலகத்தை மிக இயல்பாக அழகாகக் காட்டியுள்ளார். எல்லோரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும். இந்த தலைமுறை இளைஞர்களிடம் உரையாடி, அவர்களின் உலகைக் காட்சிப்படுத்தியுள்ளார். கேமரா மிக உயர்தரமாகக் காட்சிகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. விஷுவல் நன்றாக இருக்கும் போது தான், இசையும் நன்றாக வரும். பாடல்கள் மிக இளமையாக வந்துள்ளது. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவிற்கு என் நன்றி. இப்படத்தின் இசை முதல் முறையாக என் ஆடியோ லேபிள் நிறுவனம் மூலம் வருகிறது மகிழ்ச்சி. இப்படத்தைப் பார்த்து விநியோகிக்க வந்துள்ள தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஜெகவீர் மீனாட்சி மிக நன்றாக நடித்துள்ளனர். அனைவரும் மிக இயல்பாக நடித்துள்ளனர். பாலா அசால்ட்டாக நடித்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி எனக்கு மிக முக்கியமான படம். தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது முக்கியம், அதை தன் படமாக எடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு என் நன்றி. என்னை வாழ்த்த எனக்காக வந்த எழில் சார், அருள் தாஸ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் என்னை நம்பி பயணித்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பிரேமலு ரிலீசான அன்று அது யாருக்கும் தெரியாது, அடுத்த ஷோவில் உலகத்திற்கே தெரிந்தது. அது போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்.
இவ்விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட அனைவரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.