×

நாகசைதன்யா சோபிதா பிரிவார்கள்: ஜோதிடரிடம் மகளிர் ஆணையம் சாரணை

ஐதராபாத்: நாகசைதன்யா, சோபிதா துலிபாலா ஜோடி பிரியும் என சொன்ன ஜோதிடரிடம் மகளிர் ஆணையம் விசாரணை நடத்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நாகசைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலிக்க தொடங்கினார். கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது.

பல தரப்பினரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், ஆந்திராவை ேசர்ந்த ஜோதிடர் வேணுசாமி, இந்த ஜோடி நீண்ட காலம் நீடிக்காது. திருமணமாகி சில வருடங்களில் ஒரு பெண்ணால் பிரிவார்கள் என கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வேணுசாமி மீது போலீசில் புகார் தரப்பட்டது. அதன் பிறகு வேணு சுவாமி இது குறித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

மேலும் தன்னை மகளிர் உரிமை ஆணையத்தில் இருந்து விசாரிக்க அழைக்கக்கூடாது என நீதிமன்றத்தில் தடையும் பெற்றிருந்தார். தற்போது தெலுங்கானா உயர்நீதிமன்றம் இந்த தடையை விலக்கியுள்ளதுடன் மகளிர் உரிமை ஆணையத்திற்கு இது குறித்து விசாரணை நடத்த அனுமதியும் அளித்துள்ளது. இந்த விசாரணை குறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமை ஆணையம் தற்போது வேணு சுவாமியை அழைத்து விசாரிக்க துவங்கியுள்ளது.

Tags : Nagachaitanya ,Sobitha ,Women's Commission ,Hyderabad ,Sobitha Dhulipala ,Samantha ,
× RELATED விவாகரத்தான பெண்களை குற்றவாளி போல் பாக்குறாங்க: சமந்தா குமுறல்