ராமநவமி விரத வழிபாடு மற்றும் அதன் சிறப்புகள்!!!

வாழ்வில் வளம் சேர்க்கும் ராமநவமி விரத வழிபாடு மற்றும் அதன் சிறப்புகள் மற்றும் பலன்களைப் பற்றி பார்க்கலாம்..!
Advertising
Advertising

திருமாலின் அவதாரங்களில் சிறப்பு மிக்கதாகவும், அறம் நிறைந்ததாகவும் உள்ளது ராம அவதாரம் ஆகும். மனிதனின் நீதி முறைகள் இவ்வாறு தான் வாழவேண்டும் என்ற ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மீக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாக மண்ணில் அவதரித்தார்.

ஸ்ரீராமர்  அவதரித்த நாள் ராமநவமி என்று அழைக்கப்படுகின்றது. மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான், சித்திரை மாதம் சுக்லபட்சம் அதாவது வளர்பிறை நவமி திதியில் பிறந்தார். அந்த நாளையே நாம் ராமநவமி ஆக கொண்டாடுகின்றோம்.

ராமநவமி விரதம் இருக்கும் முறை:

அதிகாலையில் குளித்து வீட்டைத் தூய்மைப் படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு துளசி மாலை அணிவிக்க வேண்டும். அதன் பின் பழம், வெற்றிலை, பாக்கு, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.  வழிபாட்டின் போது நிவேதனமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயசம், வடை போன்றவற்றை படையுங்கள்.

ராம நவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைபிடிக்க வேண்டும். ராமரைப் பற்றிய நூல்களை படித்து  அவரது துதியை பாராயணம் செய்வதுமாக  இருப்பது நன்மையளிக்கும். ஸ்ரீராமஜெயம் என்னும் எழுத்தை 108 முறை அல்லது 1008 முறை எழுத வேண்டும். ஸ்ரீராமா என்ற நாமத்தை மூன்று முதல் அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும்.

இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து, அன்பும் அறிவும் உண்டாகும். மன அமைதியும், மகிழ்ச்சியும் விளையும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நிவேதனமாக சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.

    குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

    லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.

    பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள்.

    வியாதிகள் நீங்கும்.

    தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும்.

    குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    குடும்ப நலன் பெருகி வறுமையும் பிணியும் நீங்கும்.

ஸ்ரீ ராமரின் ஜாதகம் அதனால் ஏற்படும் பலன்:

ஸ்ரீ ராமரின் ஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ அல்லது செப்புத் தகட்டில் செய்து வைத்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும். காரணம் ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன் மேஷத்தில், செவ்வாய் மகரத்தில், குரு கடகத்தில், சுக்கிரன் மீனத்தில், சனி துலாமில் என ஐந்து முக்கிய கிரகங்களும் ஜெய் ஸ்தானத்தில் இருக்கிறது.

வீட்டில் வளம் செழிக்கும்.

நோய் பிணிகள் நீங்கும்.

சகல சௌபாக்கியங்களும் நிறைந்திருக்கும்.

வாழ்வில் வளம் சேர்க்கும்.

இந்த வருடம் 2020ஆம் ஆண்டு ராம நவமி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நாளை வருகின்றது. நாளைய தினம்,  பூஜை செய்யும் நேரம் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ஆகும். ஆகையால் இந்த நேரத்தில் உங்கள் பூஜைகளை செய்து பலன் பெறுங்கள்.

முக்கிய அறிவிப்பு:

இந்த ஆண்டு வரும் நாம நவமி அன்று 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், நாம் கோவிலுக்கு சென்று ராமரின் பட்டாபிஷேகத்தை காண இயலாது. ஆகையால் வீட்டில் ராமரின் பட்டாபிஷேக படத்தை வைத்து அல்லது ஆஞ்சநேயரின் படத்தை வைத்து எளிமையான முறையில் வழிபடுங்கள். வீட்டில் ராமரின் படம் இல்லாதவர்கள் ஆஞ்சநேயர் படம் அல்லது பெருமாளை, இராமராக நினைத்து பூஜை செய்யலாம் வளம் தரும்.

இவ்வளவு சிறப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ராமநவமி அன்று ராமபிரான், ஆஞ்சநேயர் வழிபட்டு வாழ்வில் நோய்கள் நீங்கி வளம் பெறுங்கள்.

Related Stories: