×

‘ஆன்ட்டி’ என அழைத்த 19 வயது ஹீரோயின் 36 வயது தமன்னா கண்டிப்பு

மும்பை: தன்னை ‘ஆன்ட்டி’ என அழைத்த இளம் நடிகையை தமன்னா கண்டித்தார். தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உள்ளார் தமன்னா. நடிப்பை தாண்டி கடந்த சில படங்களில் தன்னுடைய கிளாமர் ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தமன்னா, இந்தி நடிகர் விஜய் வர்மாவை தீவிரமாக காதலிக்கிறார். இவர்களின் திருமணம் இந்த ஆண்டில் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ‘சாது’, ‘ஆளவந்தான்’, ‘கேஜிஎஃப் 2’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரவீனா டண்டனின் மகள் ராஷா ததானி ‘ஆசாத்’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.

சமீபத்தில் நடிகை தமன்னா தனக்கு வளர்ப்பு தாய் போன்றவர் என்று கூறியிருந்தார். நேற்று முன்தினம் ‘ஆசாத்’ படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னாவை 19 வயதான ராஷா ததானி, அனைவரின் முன்பும் ஆன்ட்டி என்று அழைத்துள்ளார். அவர் ஆன்ட்டி என்று அழைத்ததும் தமன்னா அதிர்ச்சியானார். அவர் அப்படி அழைத்ததால் கோபமான தமன்னா, அதை வெளிக்காட்டதபடி, ராஷாவின் தோள் மீது தட்டி, ‘ஆன்ட்டின்னு எல்லாம் சொல்லக்கூடாது’ என்று கண்டித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமன்னாவுக்கு தற்போது 36 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamannaah ,Mumbai ,Bollywood ,
× RELATED காதலனுடன் தமன்னா கருத்து மோதல்: பிரிந்துவிட்டதாக வெளியாகும் வதந்திகள்