×

இந்த வாரம் என்ன விசேஷம்?

மார்ச் 28, சனி : சதுர்த்தி. தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் உற்ஸவம் ஆரம்பம்.  கார்த்திகை விரதம்.  

மார்ச் 29, ஞாயிறு : திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உற்ஸவாரம்பம். நேச நாயனார் குருபூஜை.  காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் காலை சூரியப் பிரபையிலும், இரவு சந்திரப் பிரபையிலும் பவனி.  மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலில் வெண்ணைய்த்தாழி உற்ஸவம்.

மார்ச் 30, திங்கள் : சஷ்டி. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராமாவதாரம். இரவு ஹனுமந்த வாகனத்தில் புறப்பாடு. பரமக்குடி அன்னை முத்தாலம்மன் உற்சவாரம்பம். மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலில் தேரோட்டம்.  வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று சத்ரு தோஷம் அகல  சத்ரு சம்ஹார சுப்பிரமண்ய யாகம்.

மார்ச் 31, செவ்வாய் : திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அன்ன வாகனத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் உற்சவாரம்பம். தொட்டியம் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் தேரோட்டம்.

ஏப்ரல் 1, புதன்  : அஷ்டமி. காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ரிஷபவாகன  சேவை. திருவையாறு அந்தணர்புரத்தில் ஸ்ரீநந்திகேஸ்வரர் ஜனனம். இரவு பட்டாபிஷேகம், செங்கோல் கொடுத்தல்.

ஏப்ரல் 2, வியாழன்  : ஸ்ரீராம நவமி. தாயமங்கலம் ஸ்ரீமுத்து மாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி வரும் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி நக்கீரர் லீலை. இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி. திருவையாறு ஐயாறப்பர் வெட்டிவேர் சிவிகையிலும், நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்திலும் திருமழபாடிக்கு எழுந்தருளல், நந்திகேஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருமழபாடியில் திருக்கல்யாணம். காஞ்சியில்
இரவு வெள்ளிரதம், திருச்சேறை அருகிலுள்ள பருத்திசேரி ஸ்ரீராமநவமி, புள்ளங்பூதங்குடி ஸ்ரீராமநவமி உற்சவம்.

ஏப்ரல் 3, வெள்ளி : தசமி. பழனி ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்.  பழனி ஸ்ரீஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் தெப்பல் உற்சவம், நாச்சியார் கோயில் கல்கருட சேவை. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று நட்சத்திர தோஷம் விலக  விசாகம் நட்சத்திர சாந்தி ஹோமம்.

Tags :
× RELATED இன்று சந்திர கிரகணம்: கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை என்ன?