×

பலன் தரும் ஸ்லோகம் (உயர் பதவி கிடைக்க...)


த்ரயாணாம் தேவாநாம் திரிகுண ஜநிதாநாம் தவ ஸிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹந மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந் முகுலித கரோத்தம்ஸ மகுடா:
                 (ஸௌந்தர்ய லஹரி-25)

பொதுப்பொருள்: ஈசனின் மனைவியான தேவியே நமஸ்காரம். உன் திருவடிகளில் செய்யப்படும் பூஜை ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களால் தோன்றிய நான்முகன், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளால் செய்யப்படும் பூஜையாகும். உன் திருவடித் தாமரைகளைத் தாங்கும் ரத்ன சிம்மாசனத்தின் அருகில் கிரீடங்களுக்கு மேலாகத் தம் கைகளைக் கூப்பியபடி அவர்கள் மூவரும் நின்று கொண்டிருக்கிறார்கள். உன் திருவடிகளைப் பூஜித்தாலே அவர்களையும் பூஜித்ததாக ஆகிவிடுமன்றோ? (இத்துதியை 45 நாட்கள் தினமும் காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து 1000 தடவை பாராயணம் செய்தால் முறைப்படி கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, தடங்கல்கள் எல்லாம் நீங்கி எளிதாகக் கிட்டும்.)

Tags : Slocum ,
× RELATED பலன் தரும் ஸ்லோகம் (கடன்கள் தீர, சகல தோஷங்களும் விலக)