×

குரு பகவானுக்கு 16 வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால் கிடைக்கும் பலன்கள்!

மனிதனுக்கு ஆசிரியர் கற்றுக் கொடுத்தாலே அவன் அதை படித்து பெரிய நிலையை அடைகின்றான். அப்படி இருக்க தேவர்களுக்கே குருவாக இருக்கக் கூடியவர் குருபகவான்.அப்படி ஆசானாக இருக்கக் கூடிய குருபகவானுக்கு ஒரு ஆண்டில் தொடர்ச்சியாக 16 வியாழக்கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்து வருவதால் அளப்பரிய பலன்களை தருவார்.

குரு விரதமுறை

வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் வியாழக்கிழமையும் ஒன்று. இந்த நாளில் பிரகஸ்பதி எனக்கூடிய குரு பகவானை வழிபடக் கூடிய தினமாக பார்க்கப்படுகின்றது.ஒரு மாதத்தில் சுக்ல பட்சம் எனப்படக்கூடிய வளர்பிறையில் வரக்கூடிய வியாழக் கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். இப்படி ஒரு வருடத்தில் வளர்பிறையில் வரக்கூடிய 16 வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக விரதம் மேற்கொள்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.இதே போன்று 3 ஆண்டுகள் விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு குருபகவானின் பரிபூரணமான அருள் வாழ்நாள் முழுவதும் கிட்டும்.

குரு விரதத்தால் கிடைக்கும் பலன்கள்

மேற்சொன்ன வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்வோரின் வாழ்நாளில் பல யோகங்கள் உண்டாகும்.சரியான காலத்தில் திருமண யோகம் உண்டாதல், ஜாதகத்தில் குருபகவானால் ஏதேனும் தோஷம் இருந்தால் அவை நீங்கி நல்லருள் உண்டாகும்.வியாபாரம், தொழிலில் பாலரும் சரியான லாபம் இல்லை, வருவாய் இல்லை என கஷ்டப்படுபவர்களுக்கு இந்த விரதத்தால், வியாபாரம் பெருகி நல்ல லாபமும், முன்னேற்றமும் உண்டாகும்.இதனால் குடும்பத்தில் பொருளாதார நிலை மிக சிறப்பாக முன்னேறும்.குருவின் அருள் அவருக்கு மட்டுமல்லாமல், அவரின் குடும்பத்திற்கும் கிடைத்து குடும்பத்தில் சுப்ட்சம் உண்டாகும்.

Tags : Guru Bhagavan ,
× RELATED மங்களம் பொங்கும் பங்குனி மாதம்!