×

நான் போதைக்கு அடிமையாகி விட்டேனா: விஷால் பரபரப்பு பேச்சு

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் 13 வருடங்களுக்கு பிறகு இப்போது பொங்கலுக்கு வெளியாகி வெற்றிபெற்ற படம், ‘மதகஜராஜா’. இதையொட்டி நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் விஷால், அஞ்சலி, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குனர் சுந்தர்.சி, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் கலந்துகொண்டனர். அப்போது விஷால் உருக்கமாக பேசியதாவது: இதற்கு முன்பு மேடையில் பேசியபோது என் கை, கால்கள் மற்றும் உடம்பில் ஏற்பட்ட நடுக்கம் பற்றி உலக அளவில் செய்திகளை கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி. நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மீண்டு வரவேண்டும் என்று பலர் போன் செய்தனர். என்னை எவ்வளவு பேர் மனதார நேசிக்கின்றனர் என்று அப்போது தெரிந்துகொண்டேன். நான் போதைக்கு அடிமையாகி விட்டதாகவும், நரம்புத்தளர்ச்சி காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் வதந்தி பரப்பினார்கள்.

இனி விஷாலுக்கு எதிர்காலம் இல்லை என்றார்கள். இன்று எல்லாவற்றையும் கடந்து மீண்டு வந்துள்ளேன். பல வருடங்களாக பழகிய அன்புத்தோழி வரலட்சுமி, பிரிட்ஜில் வைத்தது போல் பிரெஷ்சாக இருக்கிறார். ‘மதகஜராஜா’, எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் செல்லும் டிரெயின். அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன், அஜய் ஞானமுத்து ஆகியோர் இயக்கத்தில் நடிக்கிறேன். ‘துப்பறிவாளன் 2’ படத்தை நானே இயக்கி நடிக்கிறேன். மீண்டும் சுந்தர்.சியுடன் பணியாற்ற காத்திருக்கிறேன். ‘மதகஜராஜா 2’ உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.

Tags : Vishal ,Chennai ,Sundar.C ,Pongal ,Anjali ,Vijay Antony ,Richard M.Nathan ,thanksgiving ,
× RELATED கை, கால் நடுக்கம் இப்ப இல்ல: விஷால் உருக்கம்